அனிமேஷன் படிப்புகளில் எப்படி சேரலாம்?

அதிக வருமானமும், வேலை வாய்ப்புகளும் தரும் துறையாக அனிமேஷன் துறை வளர்ந்து நிற்கிறது. இத்துறையின் மீதான ஆர்வமும் மாணவர்களுக்கு அதிகரித்து வருகிறது. இத்துறை தொடர்பான படிப்புகளில் சேரும் முறைகளை தெளிவாக அறிதல் முக்கியம்.

Blog Details

   படிப்புகள்
அனிமேஷன் தொடர்பான ஏராளமான இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. அவற்றில்,
■BSc in Animation and Visual Effects
■ Diploma in Animation
■ Certificate courses in Animation and Graphics
■ Diplomas in Animation, Video Game Programming, Game Art, Computer generated Imagery(CGI), Design, Stop - motion Animation, Claymation and 3D filmmaking போன்றவை முக்கியமானவை.

அனிமேஷன் துறை என்பது அதிகளவில் தொழில்நுட்பம் தொடர்பானது என்பதால், அத்துறையில் ஈடுபடும் ஒருவர், சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் குறித்து தெளிவான அறிவை தினந்தோறும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உயர்கல்வியில் சேர வேண்டுமெனில், அனிமேஷன் அல்லது மல்டிமீடியா அல்லது கவின் கலையில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அதேசமயத்தில், இத்துறையில் சிறப்பு படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள், சில கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்கின்றன.

இந்நிறுவனங்கள், கட்டிடக்கலை, தொழில்நுட்பம், கவின் கலை அல்லது பொறியியல் பின்னணி கொண்ட மாணவர்களை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன.

சேர்க்கை
இத்துறையில் நுழைய நீங்கள் பாடப்புத்தகங்களை காதலிக்க வேண்டிய அவசியமில்லை. தேவையான நேரத்தில், உங்களின் படைப்பாக்க மற்றும் கலைத் திறன்களை வெளிப்படுத்தினால் போதும்.

எனவே, உங்களின் வரைதல் திறன், களிமண் செய்உருத் திறன்(clay modelling), பெயிண்டிங், காட்சிப்படுத்தும் திறன் ஆகியவற்றை தேர்வின்போது வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும். இதைத்தவிர, C ++ and Java போன்ற நிலைகளிலான கணிப்பொறி அறிவும் உங்களுக்கு கூடுதல் தகுதியை அளிக்கும்.

படிப்பின் காலம்
இத்துறை சார்ந்த படிப்புகளின் காலம், 6 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை நீள்கின்றன. மேலும், பல பகுதிநேர மற்றும் ஆன்லைன் படிப்புகளும் உள்ளன. இத்தகையப் படிப்புகள் உங்களின் நேர வசதிக்கு ஏற்றவை. மேலும் தொடர்புக்கு: AAKHAASH Institute of Media Studies +91 413 4205425


Back