இளைஞர்கள் மத்தியில், தொழில்நுட்பம் சார்ந்த படிப்பு களுக்கு என்றுமே ஈர்ப்பு அதிகம். அந்த வகையில், தற்போது திருமண விழா முதல் திரைப்படம் வரை, விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம் புரட்சி செய்து வருகிறது. இத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தற்போது மவுசு அதிகம்.
திரையில் உயிரோட்டமாக காட்டுவதற்காக, உருவங்களை படைக்கும் கலைக்கு அனிமேஷன் என்று பெயர். இக்கலையானது, கலையம்சமான படங்கள், வணிகப் படங்கள், பாப் வீடியோக்கள், கம்யூட்டர் கேம்ஸ் மற்றும் வலைத்தளங்கள் என்ற வகையில் அனைத்து வகை மீடியாக்களிலும், இந்த அனிமேஷன் பயன்படுத்தப்படுகிறது.
அதிக வருமானமும், வேலை வாய்ப்புகளும் தரும் துறையாக அனிமேஷன் துறை வளர்ந்து நிற்கிறது. இத்துறையின் மீதான ஆர்வமும் மாணவர்களுக்கு அதிகரித்து வருகிறது. இத்துறை தொடர்பான படிப்புகளில் சேரும் முறைகளை தெளிவாக அறிதல் முக்கியம்.
அதீத தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மீடியா துறையில் ஏற்பட்டுள்ள அபரிமித மாற்றங்கள் ஆகிவற்றால், மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உருவாகியுள்ள வேலை வாய்ப்புகள் எண்ணற்றவை.